பிறந்த குழந்தைக்கு விக்கல் வந்தால் என்ன செய்வது?

269

பிறந்த குழந்தைக்கு விக்கல் வந்தால் என்ன செய்வது?

பொதுவாக விக்கல் வந்தாலே யாரோ நமக்கு வேண்டியவர்கள் நினைக்கிறார்கள் என்று கூறுவது இயல்பு. இதுவே பிறந்த குழந்தைக்கு விக்கல் வந்தால் இறைவன் நினைக்கிறார் என்று பெரியவர்கள் சொல்வார்கள். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது அதிக்கப்படியான காற்றை விழுங்குவதன் காரணமாக குழந்தைக்கு விக்கல் ஏற்படுகிறது.

சரி, விக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்….

  1. விக்கலை நிறுத்துவதற்கு சிறிது நேரம் மூச்சை பிடித்துக் கொண்டாலே போதும். ஆனால், இந்த முறை குழந்தைக்கு ஆபத்து. அப்படியெல்லாம் செய்யக் கூடாது.
  2. தாய்ப்பால் கொடுக்கும் போது அதிகப்படியான காற்றை உள்ளிழுப்பதன் மூலமாக குழந்தைக்கு விக்கல் ஏற்படுகிறது. அதிகப்படியான காற்றை விழுங்காமல் இருப்பதற்கு ஒரே பக்கமாக தாய்ப்பால் கொடுக்க கூடாது. இரு பக்கமும் மாறி மாறி குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். இதனால், காற்றை விழுங்காமலும் இருக்கும், விக்கலும் வராமலும் இருக்கும்.
  3. தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தைகளுக்கு ஏப்பம் வர வேண்டும். அப்படி ஏப்பல் வந்தால் தான் தாய்ப்பாலின் போது குழந்தைகள் விழுங்கிய காற்று வயிற்றிலிருந்து வெளியேறும். அப்படி ஏப்பம் வந்தால் விக்கல் வராமலிருக்கும்.
  4. குழந்தைகளுக்கு விக்கல் வரும் போது அவர்களது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் விக்கல் நின்றுவிடும்.
  5. குழந்தைகளுக்கு பசிக்கும் முன்பே தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். அப்படி செய்தால் விக்கல் ஏற்படாது.
  6. குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படுவதற்கு வாயுத் தொல்லையும் ஒரு காரணமாக இருக்கலாம். வாயு தொல்லை காரணமாக விக்கல் எடுத்தால் அதற்கு அறிகுறியாக வாந்தி எடுப்பார்கள். வாயுத் தொல்லை ஏற்படாமல் இருப்பதற்கு அவ்வவ்போது பால் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுத்தும் விக்கல் நிற்கவில்லைய் என்றால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் குழந்தை வாந்தி எடுத்துவிட வேண்டும். இப்படியெல்லாம் பார்த்து பார்த்து தான் குழந்தையின் விக்கல், ஏப்பம், வாந்தி ஆகியவற்றை கவனித்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.