பிளாக் டீ, கிரீன் டீ தெரியும்! அதென்ன மோரிங்கா டீ?

135

பிளாக் டீ, இஞ்சி டீ, கிரீன் டீ தெரியும்! அதென்ன மோரிங்கா டீ?

முருங்கைக்காய் மட்டுமல்லாமல், அதன் இலை, பூ என்று அனைத்தும் மருத்துவ குணமிக்க ஒன்றாக திகழ்கிறது.

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது நமது வேலை. சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டாலே உடலில் எந்த நோயும் வராது. பொதுவாக கீரைகளில் வைட்டமின்கள் அதிகம் இருக்கும். முருங்கையில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், பி6, சி மற்றும் மெக்னீசியம் ஆகியவை அதிகம் இருக்கிறது.

முருங்கைக் காய் எப்படியோ அது போன்று தான் முருங்கை இலையும். இதில், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கிறது. பொதுவாக பெண்கள் வீடுகளில் முருங்கைக் காய் சாம்பார், முருங்கைப் பூ ரசம், முருங்கைக் கீரை பொறியல் என்று தான் சமையல் செய்வார்கள். ஆனால், முருங்கை இலை டீ தயாரித்து குடித்திருக்க மாட்டார்கள். அப்படி முருங்கை இலையில் டீ தயாரிக்கும் முறைக்கு மோரிங்கா டீ என்று பெயர்.

மோரிங்கா டீயில், முருங்கை கீரையில் இருப்பதை விட 3 மடங்கு இரும்புச் சத்து இருக்கிறது. முருங்கை கீரையில் ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மோரிங்கா டீ குடித்து வந்தால் நன்மை உண்டாகும்.

மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை நீங்க மோரிங்க டீ சிறந்த மருத்துவ காரணியாக விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஆண்மை பிரச்சனைக்கும் முருங்கை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தினமும் காலை அல்லது மாலையில் மோரிங்கா டீ குடித்து வந்தால் உடலுக்கு நல்லது.