புரோக்கோலி பன்ச் ரைஸ்

269

தேவை: சுத்தம் செய்த புரோக்கோலி துண்டுகள் – ஒரு கப்  பாசுமதி (அ) சீரகசம்பா அரிசி – ஒரு கப்  தண்ணீர் – 2 கப்  புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு  பச்சை மிளகாய் – 2 (கீறவும்)  பெரிய வெங்காயம், தக்காளி – தலா 2 (நறுக்கவும்)  இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப்பழம் – பாதியளவு  தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்  மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) – தலா ஒரு டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்  நெய் – ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:  பட்டை – 2 சிறிய துண்டு  கிராம்பு, ஏலக்காய் – தலா 2  சோம்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடங்கள் ஊறவிடவும். புரோக்கோலியைச் சுத்தம் செய்து தயிர், மஞ்சள்தூள் சேர்த்துப் புரட்டி வைக்கவும். குக்கரில் தேவையான அளவு எண்ணெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைக்கொண்டு தாளிதம் செய்து, பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் வதக்கி, ஊறவைத்த அரிசி, புரோக்கோலியையும் சேர்க்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர்விட்டு குக்கரை மூடவும். 2 விசில்விட்டு இறக்கி, குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து எலுமிச்சைச்சாறு மற்றும் நெய்விட்டுக் கிளறி எடுத்தால், கமகமக்கும் புரோக்கோலி பன்ச் ரைஸ் ரெடி!

பயன்: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். புரோக்கோலியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளதால், இதை மதிய உணவாகச் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.  புரோக்கோலியில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.