புளூபெர்ரி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

369

புளூபெர்ரி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

தினந்தோறும் புளூபெர்ரி சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரியவந்துள்ளது.

நாள்தோறும் 22 கிராம் உலர்ந்த புளூபெர்ரி பொடியை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வர இரத்த நாளங்களின் உள் சுவர்களின் செயல்பாடு மேம்படும்.

உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைப்பதன் மூலமாக எண்டோதீலியலின் செயல்பாட்டை புளூபெர்ரி ஊக்குவிக்கிறது. உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களை பாதிக்க கூடியதாக ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் இருக்கிறது.

பாலிபினால்ஸ் மற்றும் பாலிபினால்கள் நிறைந்த புளூபெர்ரி போன்ற உணவுகள் நம் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது.

புளூபெர்ரி போன்ற சில காய்கறிகள், பழங்களை தினந்தோறும் சாப்பிட்டு வர இதய ஆரோக்கியம் மேம்படும். கோகோ, சாக்லேட், தேநீர், பருப்புகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் மசாலாப் பொருட்களிலும் இதே விளைவு காணப்படுகிறது.

புளூபெர்ரி நமது உடலில் உள்ள வேறு சில நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. புளூபெர்ரிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், வயிற்றுப் பிரச்சினைகளைப் போக்கவும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைப் போக்கவும் உதவுகிறது.