பேய், பிசாசு விலகி ஓட, சர்வ வசியம் உண்டாக தாயத்து மந்திரம்!

515

பேய், பிசாசு விலகி ஓட, சர்வ வசியம் உண்டாக தாயத்து மந்திரம்!

வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று முடக்கத்தான் மூலிகையின் அருகில் சென்று மஞ்சள் நூலால் கன்னி நூல் காப்பு கட்டி, மூலிகை சாப நிவர்த்தி மந்திரத்தை 51 முறை சொல்ல வேண்டும். இதையடுத்து, மூலிகைக்கு உயிர் கொடுக்கும் மந்திரம் 51 முறை சொல்ல வேண்டும்.

இதையடுத்து, மூலிகையில் மஞ்சள் தண்ணீர் தெளித்து வாழைப்பழம், தேங்காய், பொங்கல், படையல், வைத்து சாம்பிராணி தூபம், கற்பூர தீபம் காண்பித்து ஓம் மாசி மாசி தூமாதேவி வலிசுடு வலிசு அம் சிவ என்ற மந்திரத்தை 100 முறை சொல்லிவிட்டு மூலிகையின் வேரை பறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் தங்கத்தால் தாயத்து ஒன்று செய்து கொள்ள வேண்டும். அந்த தாயத்தில், இந்த மூலிகையின் வேரை அடைத்து தூபம் காட்டி வலது கையிலோ அல்லது கழுத்திலோ மாட்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சர்வ ஜனம் வசியம் ஆகும். பேய், பிசாசு என்று எதுவுமே கிட்ட நெருங்கவே நெருங்காது.