மண மணக்கும் காய்கறி பிரியாணி செய்வது எப்படி?

162

மண மணக்கும் காய்கறி பிரியாணி செய்வது எப்படி?

காக்டெயில் பிரியாணி (காய்கறி பிரியாணி) என்பது சைவப் பிரியர்களுக்கு பிடித்த மசாலா உணவு வகைகளுள் ஒன்று. எளிமையான முறையில் வீட்டில் காய்கறி பிரியாணி (வெஜ் பிரியாணி) தயார் செய்யும் முறை குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

தேவையானவை:

  1. பாசுமதி அரிசி – ஒரு கப்
  2. தண்ணீர் முக்கால் கப்
  3. தேங்காய் பால் – முக்கால் கப்
  4. நெய் – 100 கிராம்
  5. ரீபண்ட் ஆயில் – 100 கிராம்
  6. முருங்கை பீன்ஸ்- 50 கிராம்
  7. பச்சை பட்டாணி – 50 கிராம்
  8. பீன்ஸ் – 50 கிராம்
  9. கேரட் – 50 கிராம்
  10. எலுமிச்சை பழம் – 1
  11. நெய் – தேவையான அளவு
  12. கொத்த மல்லி இலை – தேவையான அளவு
  13. புதினா இலை – தேவையான அளவு
  14. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
  15. முந்திரி பருப்பு – 6 எண்ணம்
  16. மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி
  17. உப்பு – தேவையான அளவு
  18. பட்டை – ஆள்காட்டி விரல் அளவு
  19. கிராம்பு – 2 எண்ணம்
  20. ஏலக்காய் – 3 எண்ணம்
  21. சின்ன வெங்காயம் – 100 கிராம்
  22. இஞ்சி – சிறிதளவு
  23. வெள்ளைப்பூண்டு – 3 பற்கள்
  24. கசகசா – 2 தேக்கரண்டி
  25. முந்திரி பருப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியைக் நன்றாக கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதற்கிடையில் அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக்கொள்ள வேண்டும்.

இதன் பின், குக்கரில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும், நன்றாக வதங்கியவுடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

இதன் பிறகு, காய்கறி, தக்காளி, தேவையான உப்பு, மஞ்சள்தூள், தயிர், புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஊறிக்கொண்டிருக்கும் அரிசியை, தண்ணீருடன் மேற்கண்ட கலவையில் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்க வேண்டும்.

இறுதியாக முந்திரிப்பருப்பு மற்றும் மேற்புறமாக தூவி சூடாக பரிமாற சூப்பரான புலாவ் சுவை கிடைக்கும். இதுவே காக்டெயில் பிரியாணி.