மஷ்ரூம் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?

119

மஷ்ரூம் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?

குழம்பு வகைகளில் காளான் என்கிற மஷ்ரூம் வெரைட்டியாக பயன்படுத்தப்பட்டாலும், மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் சமைத்து சாப்பிடுவது என்பது ஒரு விதமான சுவை தான். அசைவம் சாப்பிடாதவர்கள் இந்த வெரைட்டி ரைஸ் விரும்பி சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

  1. வெங்காய‌த்தாள் – சிறிதளவு
  2. பெரிய வெங்காயம் -1
  3. சோயா சாஸ் – 4 தேக்கரண்டி
  4. மிள‌குத்தூள் – ஒரு தேக்க‌ர‌ண்டி
  5. சாத‌ம் – 4 கப் (வ‌டித்து ஆறவைத்தது)
  6. உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
  7. ப‌‌ச்சை மிள‌காய் – 3
  8. இஞ்சி, பூண்டு – ஒரு தேக்கரண்டி
  9. பட்டன் காளான்கள் – 15

செய்முறை:

முத‌லில் பட்டன் காளான்களை எடுத்துக்கொண்டு நீரில் சுத்தப்படுத்தி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் காய்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெயை விட்டு சூடாக்க‌ வேண்டும். பின் வெங்காய‌ம், பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வ‌த‌க்க‌ வேண்டும். அடுத்து பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கியதை சேர்த்து சிறிது நேர‌ம் வத‌க்கிவிட்டு, நறுக்கிய காளான் துண்டுகளை வாணலியில் சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, வடித்து வைத்திருந்த சாதத்தைக் கொட்டி கிளறவும். பின்னர் மிளகுத்தூள், சோயா சாஸ் முதலியவற்றை சேர்த்து சூட்டிலேயே இறக்கி, அதன் மேல் சில வெங்காயத்தாள்களை தூவி கலந்தால் சுவையான மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் தயார்.