மிகவும் சுவையான முருங்கை கீரை துவையல் செய்வது எப்படி?

103

மிகவும் சுவையான முருங்கை கீரை துவையல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. முருங்கைக் கீரை – 1 கப்
  2. உளுத்தம் பருப்பு – 50 கிராம்
  3. காய்ந்த மிளகாய் – 10
  4. புளி – சிறிதளவு
  5. வெங்காயம் – 1
  6. உப்பு – ருசிக்கேற்ப
  7. பூண்டு – 4 பல்
  8. கடுகு – 1/2 ஸ்பூன்
  9. எண்ணெய் – 1/2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும். எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு, காய்ந்த மிளகாய், உ.பருப்பு ஆகியவை  பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு அதில் பூண்டு, நறுக்கிய வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி கொள்ளவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி விட வேண்டும்.

பின்னர் இந்த கலவையை மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்ததை தனியாக ஒரு பௌலில் மாற்றி கொள்ளவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த முருங்கை கீரை துவையல் தயார். இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசை ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்துக்களை கொண்டது.