மிளகு உணவில் சேர்த்துக் கொண்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமே வராது!

177

மிளகு உணவில் சேர்த்துக் கொண்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமே வராது!

பூத்து, காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையைச் சார்ந்தது மிளகு. இதில் வால் மிளகு மற்றும் மிளகு என்று இரு வகைப்படும். மிளகு என்று குறிக்கப்படும் இதன் சிறு கனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவை கூட்டும் பொருளாகவும் உலகம் முழுவதும் பயன்படுகிறது. மிளகு அது பதப்படுத்தப்படும் தன்மைக்கு ஏற்ப கரு மிளகு, வெண் மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகு என்று பல வகைப்படும். மிளகு கருப்புத் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

மிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் ஆகிய வைட்டமின்களும் உள்ளன. மிளகானது சித்த மருத்துவ முறைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. மிளகை நன்றாக பொடி செய்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் முற்றிலும் நீங்கும். அதிகமாக சளி தொல்லைகள் இருப்பவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினந்தோறும் அரை ஸ்பூன் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும். மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல் வலி, பல் சொத்தை, ஈறு வலி, ஈறுகளில் ரத்தம் வருதல் ஆகியவை சரியாகும். பற்களும் வெண்மையாகும். அதோடு வாய் துர்நாற்றமும் நீங்கும்.

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலை மாலை என்று இரு வேளையும் சாப்பிட்டு வர தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். இவ்வளவு ஏன் மிளகை சுட்டு அதன் புகையினை மூக்கில் வைத்து இழுத்தால் தலை வலி குணமாகும்.

முருங்கை இலை, மிளகு, கல்யாண முருங்கை இலை மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும். ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதோடு சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும்.

வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையும் கொண்டுள்ளது. உடலில் உண்டாகும் காய்ச்சலுக்கு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது. காரமும், மணமும் கொண்டுள்ளது. உணவை செரிக்க வைக்க பயன்படுகிறது. சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி ஆகிய மூன்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது.