முப்பருப்பு வடை செய்வது எப்படி?

90

முப்பருப்பு வடை செய்வது எப்படி?

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

மூன்று பருப்புகளையும் நன்றாகக் கழுவி நீர்விட்டு, மிளகாயையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை வடிகட்டி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்த மாவை உருட்டி வடைகளாகத் தட்டிப்போட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுத்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு எண்ணெயை வடியவிடவும்.

குறிப்பு: ஆடி அமாவாசை அன்று இந்த முப்பருப்பு வடையையும் சேர்த்து முன்னோர்களுக்குப் படைப்பார்கள்.