மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவும் முட்டைக்கோஸ் சாண்ட்விச் செய்வது எப்படி?
முட்டைக்கோஸ் மூளையை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் உணவுகளில் ஒன்றாகும். வைட்டமின் கே நரம்பு செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க முக்கியம் ஆகும். இப்படி பல நன்மைகள் கொண்ட முட்டைக்கோஸ் கொண்டு செய்யப்படும் இந்த முட்டைக்கோஸ் சாண்ட்விச் சிறியவர் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முட்டைக்கோஸ் சாண்ட்விச் செய்வது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
- முட்டைக்கோஸ் – கால் கிலோ
- சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
- சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்
- வெண்ணெய் – சிறிதளவு
- தக்காளி சாஸ் – 4 டீஸ்பூன்
- கோதுமை பிரட் துண்டுகள் – 8
- வெங்காயம் – 1
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முட்டைக்கோஸை மிகப் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் நீரில் கழுவியபின்பு இதனோடு உப்பு, எலுமிச்சை சாறு கலந்து இட்லி தட்டுகளில் வைத்து பத்து நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வெங்காயம், முட்டைகோஸ், தக்காளி சாஸ், சீரகத்தூள், சில்லி சாஸ் போட்டு சிறிது வெண்ணெய் சேர்த்துக் கிளற வேண்டும்.
ஒரு பிரட் துண்டின் நடுவில் இந்த கோஸ் கலவையை வைத்து அதன் மேல் மற்றொரு பிரட்டால் மூடி டோஸ்ட் செய்ய வேண்டும். இப்போது சுவையான சத்து நிறைந்த முட்டைக்கோஸ் சாண்ட்விச் ரெடி…