யோகர்ட் தர்பார்

242

தேவை:  யோகர்ட் – 100 மில்லி  ஸ்ட்ராபெர்ரி பழம் – 2  தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்  சாட் மசாலாத்தூள் – 2 சிட்டிகை  பொடி செய்த ஓமம் – ஒரு சிட்டிகை  கறுப்பு உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: யோகர்ட் உடன் பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக் கடைந்து சாட் மசாலாத்தூள், ஓமம், தேன், கறுப்பு உப்பு சேர்த்துக் கலந்து எடுத்தால் யோகர்ட் தர்பார் ரெடி.

பயன்: இதில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதால் இது ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் பொருளாகும். இதில் உள்ள வைட்டமின் சி, பி 6, பி 12 போன்றவை செரிமானத்துக்கு உதவுகின்றன. இதில் உள்ள ‘புரோபயாடிக்’ பாக்டீரியா செரிமான மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. பல் மற்றும் எலும்புச் சிதைவைத் தடுக்கிறது.

குறிப்பு: யோகர்ட் இல்லையெனில் வீட்டுத் தயிரிலே இதைச் செய்யலாம்.