ராகி மால்ட்

143

தென் இந்தியாவில் பிரபலமான ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை பானம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – மூன்று தேகரண்டி (அரை டம்ளர் தண்ணீரில் கேழ்வரகு மாவை கரைத்து கொள்ளவும்)

பனை வெல்லம் – ஒரு மேசைகரண்டி

பால் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து கரைத்த கேழ்வரகு மாவை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

பின், பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிண்டவும்.

பிறகு, பால் ஊற்றி கைவிடாமல் கிளறி மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.

குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு இது.