ரோஸ்ட் செய்த குடை மிளகாய் சூப் செய்வது எப்படி?

124

ரோஸ்ட் செய்த குடை மிளகாய் சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. சிவப்பு குடை மிளகாய் – 2 கிகி.
  2. லக்சா பேஸ்ட் – 150 கிராம்.
  3. மிளகு, வெங்காயம் – 100 கிராம்
  4. பூண்டு – 50 கிராம்.
  5. சமையல் கிரீம் – 200 மிலி
  6. அமோமத் பிராத் பவுடர் – சுவைக்கு ஏற்ப.
  7. உப்பு – தேவையான அளவு
  8. வெண்ணெய் – 100 கிராம்
  9. தேங்காய் பால் பவுடர் – 200 கிராம்

செய்முறை:

குடை மிளகாய்களை உப்பு, மிளகு மற்றும் கிரீம் ஆகியவற்றால் சீசன் செய்து, 10 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும். அதன் தோல் மற்றும் விதைகளை அகற்றி விட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். சூப் பாத்திரத்தில், வெண்ணெயை உருக்கி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை அதில் வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்த குடை மிளகாயைச் சேர்த்து, அதனுடன் லக்சா பேஸ்ட், தேங்காய் பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து, கொதிக்க வைத்து, மிதமானச் சூட்டில் வைக்க வேண்டும். அரோமட், உப்பு, மிளகு ஆகியவை சேர்த்து சூடாக பரிமாற இறுதியாக ரோஸ்ட் செய்த குடை மிளகாய் சூப் தயார்.