வாய்ப்புண் குணப்படுத்தும் மணத்தக்காளி – பகுதி 3!

499

வாய்ப்புண் குணப்படுத்தும் மணத்தக்காளி – பகுதி 3!

நம் நாட்டில் எத்தனையோ மூலிகை தாவரங்கள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் நாம் பெரிதாக பயன்படுத்திக் கொள்வதில்லை. நமது முன்னோர்கள் அதனை நன்றாகவே பயன்படுத்தி நீண்ட நாட்கள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் எளிதில் ஜீரணமாகாத உணவுகளைத்தான் நாம் அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம். சிக்கன் ப்ரைடு ரைஸ், எக் ப்ரைடு ரைஸ், கிரில் சிக்கன், நூடுல்ஸ், புரோட்டா ஆகியவற்றை நாம் விரும்பி சாப்பிடுவதோடு, நமது குழந்தைகளுக்கும் அதைத்தான் கொடுக்கிறோம். இதன் மூலமாக உடல் நல பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சரி, இதெல்லாம் இருக்கட்டும், மூலிகைகள் குறித்தும், அதற்கான பலன்கள் குறித்தும் இந்தப் பதிவில் நாம் காண்போம்…

முந்தைய பதிவின் தொடர்ச்சி தான் இது – பகுதி – 3….

பாகற்காய் பொடி: சர்க்கரை நோயை குணப்படுத்தும். குடல்வால் புழுக்கள் அழிக்கப்படும்.

வாழைத்தண்டு பொடி: சிறுநீரக் கோளாறு, கல் அடைப்புக்கு சிறந்த மருந்து.

மணத்தக்காளி பொடி: வாய்ப்புண், தொண்டைப் புண் நீங்கவும், குடல் புண் ஆற்றவும் பயன்படுகிறது.

சித்தரத்தை பொடி: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

சுக்கு பொடி: ஜீரண கோளாறுகளுக்கு சிறந்த மருந்து.

பொடுதலை பொடி: முடி உதிர்வதையும், பேன் அகற்றவும் பயன்படுகிறது.

கருஞ்சீரகப் பொடி: நஞ்சு வெளிப்படவும், சர்க்கரை, குடல் புண் நீங்கவும் பயன்படுகிறது.

வெள்ளெருக்கு பொடி: இரத்தத்தை சுத்தம் செய்யவும், வெள்ளைப்படுதலை தடுக்கவும், அடிவயிறு வலி நீங்கவும் பயன்படுகிறது.

ஆடாதொடை பொடி: ஆஸ்துமாவிற்கு சிறந்த மருந்து. அதோடு, சுவாசக் கோளாறு பிரச்சனையையும் சரி செய்கிறது.

வெட்டி வேர் பொடி: இந்தப் பொடியை நீரில் கலந்து குடித்து வர சூடு குறையும். முகம் பொலிவு பெறவும் பயன்படுகிறது.

நன்னாரி பொடி: உடல் குளிர்ச்சி தரும்.

நெருஞ்சில் பொடி: சிறுநீரகக் கோளாறு, காந்தல் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

கஸ்தூரி மஞ்சள் பொடி: பெண்கள் இந்தப் பொடியை தினந்தோறும் பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி: இந்தப் பொடியை பயன்படுத்த நறுமணம் அதிகரிக்கும்.

கருவேலம்பட்டை பொடி: பல்கறை, பல் சொத்தை, பூச்சி பல், பல்வலி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.