வாழைக்காய் கறியமுது ரெசிபி செய்வது எப்படி?

72

வாழைக்காய் கறியமுது ரெசிபி செய்வது எப்படி?

தேவையானவை:

பெரிய வாழைக்காய் – ஒன்று, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், புளி – சிறிதளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள்  சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வாழைக்காயைத் தோல் சீவி சிறிய கனமான துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து அளவாக நீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் போட்டு வாழைக்காயை அதில் போட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெந்த வாழைக்காய் சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவல் தூவிக் கலந்து இறக்கவும்.

குறிப்பு: ஆடி அமாவாசையன்று வாழைக்காய் கறியமுது செய்வது வழக்கம்.