விளக்கெண்ணெய் குடித்தால் உடல் எடை குறையுமா?

292

விளக்கெண்ணெய் குடித்தால் உடல் எடை குறையுமா?

பண்டைய காலங்களில் நமது முன்னோர்கள் விளக்கெண்ணெய்யை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு விளக்கெண்ணெய் அப்படி என்றால் என்ன என்று கேட்கிறார்கள். சரி, இதெல்லாம் இருக்கட்டும், விளக்கெண்ணெயின் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்…

  1. பிறந்த 6 மாத குழந்தையிலிருந்து வயதான தாத்தா பாட்டி வரை அனைவருக்குமே விளக்கெண்ணெய் தேவை இருக்கிறது. குழந்தைக்கு வயிறு வலி ஏற்பட்டால் உடனே விளக்கெண்ணெய் தான் தொப்புளில் தடவுவார்கள். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அதற்கு விளக்கெண்ணெய் மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது.
  2. ஒபேசிட்டி என்ற உடல் எடைப் பிரச்சனை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை குடித்து வந்தால் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு உடல் எடை குறையும்.
  3. சரும பிரச்சனை உள்ளவர்கள் அல்லது சருமத்தில் வறட்சி இருந்தால் விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் சரியாகும்.
  4. உடல் சூடுப் பிரச்சனை உள்ளவர்கள் தலையில் உச்சியில் விளக்கெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு சரியாகும்.
  5. மேலும், முடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யை சூடு செய்து, வெதுவெதுப்பான சூட்டில் தலை முடியின் வேர்ப்பகுதியில் தேய்த்தால் முடி கொட்டும் பிரச்சனை சரியாகும்.
  6. குழந்தை பெற்றெடுத்த பெண்மணிகளுக்கு அடிவயிறு தொங்கியது போன்று இருக்கும். அது போன்ற நேரங்களில் விளக்கெண்ணெய் கொண்டு அடிவயிற்றில் தேய்த்தால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம்.
  7. விளக்கெண்ணெய் கருத்தடை மருந்துகள், களிம்புகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.