வீட்டிலேயே பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி?

64

வீட்டிலேயே பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி?

இனி  பட்டர் பிஸ்கட் செய்ய மைக்ரோவேவ் அவன் தேவையில்லை இட்லி பானை போதும்!

தேவையான பொருட்கள்:

 1. மைதா : 1 கப்
 2. வெண்ணெய்: 100 கிராம்
 3. சர்க்கரை தூள்: 1/4 கப்
 4. உப்பு: 1 சிட்டிகை

செய்முறை:

 1. 1. அகலமான பாத்திரத்தில் உப்பு சேர்த்து ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடம் பிரிஹீட் பண்ண வேண்டும். இதேபோல் இட்லி பானையில் உப்பு சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் பிரீ ஹிட் செய்ய வேண்டும்.
 2. அகலமான பாத்திரத்தில் மிருதுவான வெண்ணெய், சர்க்கரை தூள் சேர்க்க வேண்டும்.
 3. வெண்ணெயும், சர்க்கரையும் நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும். குறைந்தது 5 நிமிடம் கிளறிய பிறகு க்ரீம் போல் வரும். அதுவரை கிளற வேண்டும். பிறகு இதில் மைதா மாவு சேர்க்க வேண்டும்.
 4. பிறகு இதில் உப்பு சேர்த்து நன்றாக முதலில் உதிரி உதிரியாக செய்து கொள்ள வேண்டும்.
 5. பிறகு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும் இந்த மாவு மிகவும் மிருதுவாக இருக்கும் பிறகு சிறு உருண்டையாக எடுத்து உருட்டி கொள்ள வேண்டும் பிறகு தட்டிக் கொள்ள வேண்டும்.
 6. போர்க் இன் உதவிகொண்டு விருப்பப்பட்ட டிசைன்களை செய்து கொள்ள வேண்டும் இல்லை எனில் தட்டையாக தட்டி வைக்க வேண்டும்.
 7. இப்போது உப்பு கொட்டிய அகலமான பாத்திரத்தில் ஒரு தட்டை வைத்து செய்து வைத்த பட்டர் பிஸ்கெட் இடைவெளிவிட்டு படத்தில் காட்டியவாறு வைக்க வேண்டும். பிறகு துணியால் காற்று புகாதவாறு மூடி 20 நிமிடம் மிதமான தீயில் வைக்க வேண்டும்.
 8. பிஸ்கட்டுகள் சற்று பெரிதாகி ஓரங்களில் சிவந்து வரும் பொழுது எடுத்து விட வேண்டும். இதேபோல் இட்லி பானையில் வைத்து பெரிதாகி ஓரங்கள் சிவந்து வரும் பொழுது எடுக்கவும்.
 9. பிஸ்கட்டை எடுக்கும் போதும் மிருதுவாக இருக்கும் 30 நிமிடம் கழித்து பார்க்கும் போது பிஸ்கட் மொறுமொறுவென வந்துவிடும்.
 10. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பட்டர் பிஸ்கட் அவன் இல்லாமல் இனி வீட்டிலேயே செய்யலாம்.