வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதன் நன்மைகள்!

153

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதன் நன்மைகள்!

பொதுவாகவே நாட்டு காய்கறிகளில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கும். பல வகையான காய்கறிகள் பச்சையாக சாப்பிடக்கூடிய தன்மை கொண்டிருக்கும். அதில், வெங்காயம், கேரட், வெண்டைக்காய், பூண்டு, தக்காளி என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் அதன் பலன் இன்னும் அதிகரிக்கும். அதில் வெங்காயமும் ஒன்று.

 1. வெங்காயத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆன்டி செப்டிக் இருக்கிறது. இது, உடலில் நச்சுத்தன்மை உடைய மைக்ரோ பாக்டீரியாவை செயலிழக்க செய்கிறது.
 2. வெங்காயத்தில் இருக்கும் அதிகமான இரும்புச்சத்து நமது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
 3. தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி அதிகரிப்பதில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
 4. ரத்த சோகையை குணமாக்குகிறது.
 5. வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் ஜலதோஷம் வருவது தடுக்கப்படுகிறது.
 6. ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
 7. முடி வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயம் பயன்படுகிறது வெங்காயத்தை அப்படியே அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர குளிர்ச்சி அதிகரிப்பதோடு முடி வளர்ச்சியும் அதிகமாகும்.
 8. படை, தேமல், தொழுநோய் உள்ளவர்கள் வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றை தடவி வர குணமாகும்.
 9. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 10. வெங்காயம் ஜீரணத்திற்கு உதவுகிறது. வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறது.
 11. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப் போட்டால், தொண்டையில் உள்ள வலி சரியாகும்.
 12. காக்காய் வலிப்பு உள்ளவர்கள் வெங்காய சாறு எடுத்து சாப்பிட்டு வர வலிப்பு நோய் குணமாகும்.
 13. ஒரு மண்டலம், கிட்டத்தட்ட 48 நாட்கள் வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் பலம் அதிகரிக்கும்.
 14. சின்ன வெங்காயம் சாறு கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
 15. வெங்காயத்தை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி சரியாகும்.
 16. தேள் கடிக்கு சிறந்த மருந்தாக வெங்காயம் பயன்படுகிறது. தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நறுக்கி தேய்த்து வர விஷம் இறங்கும்.
 17. நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.