வெங்காயம் சாப்பிட்டால் டாக்டருக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை!

552

வெங்காயம் சாப்பிட்டால் டாக்டருக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை!

பண்டைய காலம் முதல் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வரும் உணவுப் பொருட்களில் ஒன்று வெங்காயம். பல விதமான சத்துக்களையும், நன்மைகளையும் வெங்காயம் கொண்டுள்ளது. நேபாள் நாட்டில் இறைவனுக்கு கூட வெங்காயத்தை நிவேதனமாக படைக்கும் ஒரு பழக்கம் இன்று வரை இருக்கிறது. புரத சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட பல விதமான சத்துக்கள் வெங்காயத்தில் உள்ளது.

வழுக்கை தலைக்கும், பொடுகு நீங்குவதற்கும் வெங்காயம் ஒரு சிறந்த மருந்து. வெங்காயம் ரத்த விருத்தியை அதிகரிக்கச் செய்கிறது. பித்த நோய்கள், வாத நோய்கள், கண் நோய்களுக்கு வெங்காயம் சிறந்த மருத்துவப் பொருளாகும்.

வெங்காயத்தை பச்சையாக தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இழந்த சக்தியை மீட்கவும் பயன்படுகிறது.

 1. தினந்தோறும் 3 அல்லது 4 சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 2. தினமும் 4 அல்லது 5 வெங்காயத்தை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம், பித்தத்தால் வரக்கூடிய பிரச்சனைகள் குறையும்.
 3. வெங்காயச் சாற்றை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாறு வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
 4. வெங்காயச் சாற்றையும் வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயத்தை சமைத்து சாப்பிட்டு வர உடல் வெப்ப நிலை சரியாகும்.
 5. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர உடல் பலம் அதிகரிக்கும்.
 6. வெங்காயத்தை வதக்கி தேன் கலந்து இரவில் சாப்பிட்டு அதன் பிறகு பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
 7. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி சரியாகும்.
 8. வெங்காயச் சாற்றுடன் நீர் கலந்து குடிக்க தூக்கம் நன்றாக வரும். பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரக்கூடிய ஒரு சிறந்த பொருளாகும்.
 9. உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள் தாராளமாக வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம். இது குறைவான கொழுப்புச் சத்துக் கொண்டுள்ளது. உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள் தொடர்ந்து வெங்காயம் பயன்படுத்தி வந்தால், உடல் பருமன் குறையும்.
 10. புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள், வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு 3 வேளை என்று சிறிதளவு பருகி வந்தால் நுரையீரல் சுத்தமாகும்.
 11. தொற்று நோய் பரவும் காலகட்டங்களில் வெங்காயத்தை எடுத்துக் கொண்டால், சிறந்த பலன் கிடைக்கும். இவ்வளவு, ஏன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை வெங்காயத்தை 3 அல்லது 4 வீதம் என்று சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதோடு, தொற்றிலிருந்து நம்மை மீட்டெடுக்கும்.
 12. தலை முடி உதிரும் நிலையில் தலையில் வழுக்கை ஏற்படும். வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வழுக்கை உள்ள இடங்களில் நன்கு சூடு பறக்க தேய்த்து வர விரைவில் முடி வளரும்.
 13. தினந்தோறும் 3 வெங்காயத்தை பெண்கள் பச்சையாக சாப்பிட்டு வர உதிரச் சிக்கல் நீங்கும், மாதவிடாய் சிக்கல் அகலும்.
 14. வெங்காயத்தில் இன்சுலின் நிரம்பியுள்ளதால், நீரிழிவு நோயாளிகள் வெங்காயத்தை தவறாமல் எடுத்துக் கொள்ளலாம்.