வெண்டைக்காய் மோர் குழம்பு ரெசிபி செய்வது எப்படி?

136

வெண்டைக்காய் மோர் குழம்பு ரெசிபி செய்வது எப்படி?

வெண்டைக்காய் கொண்டு மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்….

வெண்டைக்காய் – 13

மோர் – 500 மில்லி (ஓரளவு புளிப்பு சுவை கொண்டிருக்க வேண்டும்)

காய்ந்த மிளகாய் – 2

தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப்

மிளகு, தனியா, கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு தேக்கரண்டி,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்க வேண்டும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். இறுதியாக வெண்டைக்காய் மோர்க்குழம்பு ரெசிபி ரெடி…