வெந்தயக்கீரையின் மருத்துவ பயன்கள்!
வெந்தயக்கீரை மற்றும் வெந்தயம் உணவுப் பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும் வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் இலை பகுதிதான் வெந்தயக் கீரை.
வெந்தயம் விதைகளின் மூலம் அதன் கீரை பயிரிடப்படுகிறது. இதை கீரையாக பயன்படுத்த பூக்கும் முன்பே வெந்தயச் செடியை பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறம் கொண்டது. வெந்தயக் கீரையை வீட்டு தோட்டத்திலும் தொட்டியிலும் எளிதாக வளர்க்க முடியும்.
வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிகளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையில் புரதச் சத்து, கொழுப்புச் சத்து, சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயோலின் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
வெந்தயக் கீரை ரத்தத்தை சுத்திகரிக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், பசியை தூண்டுகிறது. சொரி, சிரங்கு வராமலும் தடுக்கிறது.
வெந்தயக் கீரையை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
கீரையை அரைத்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.
மூல நோய், குடன் புண் ஆகியவற்றிற்கு வெந்தயக் கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
வெந்தயக் கீரையுடன் அத்திப்பழம், திராட்சை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் தீரும்.
வெந்தயக் கீரையை அத்திப்பழத்துடன் சேர்த்து கரைத்து கட்டிகள் மீது பற்று போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும்.
வெந்தயக் கீரையை உண்டு வந்தால் சிறுநீர் தொடர்பான கோளாறுகள் தீரும். நரம்புகளை பலப்படுத்தும். உடல் வீக்கம், வயிற்று வலி, வயிற்றில் கட்டி, சீத பேதி ஆகியவை சரியாகும்.
வெந்தயத்தை அரைத்து முகத்தில் பேஸ் பேக் போட்டால் முகம் பளிச்சிடும். வெந்தயக் கீரை மற்றும் வெள்ளைப் பூசணிக்காயை சாம்பாரில் சேர்த்து சாப்பிட்டு வர உடல் இளைக்கும்.
வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய் பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர இடுப்பு வலி நீங்கும்.
வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். வெந்தயக் கீரை வயிறு பிரச்சனைகளையும் குணப்படுத்துகின்றது.