வெந்தயத்தண்ணீர் குடிப்பதன் பயன்கள்!

197

வெந்தயத்தண்ணீர் குடிப்பதன் பயன்கள்!

தினமும் தூங்கி எழுந்ததும் காபி அல்லது டீ குடித்தால் அடுத்த வேலை செய்ய முடியும் என்று இருப்பவர்கள் எத்தனையோ பேர். அதில், சிலர் காலையில் செய்தித்தாள் வாசித்தால் தான் அவர்களுக்கு அன்றைய நாள் நகரும். சரி, காலையில் காஃபியோ அல்லது டீயோ குடித்தால் உடலுக்கு நல்லதா? என்று கேட்டால் இல்லைஎன்று கூட சொல்லலாம்.

ஏனென்றால், தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் வாந்தி, மயக்கம், தலை சுற்றல் போன்றவை உருவாவதற்கு முதன்மை காரணமாக விளங்குவதே டீ, காஃபி குடிப்பதால் தான் என்று கூறப்படுகிறது. சரி, இதற்கு பதிலாக என்ன செய்யலாம் என்ற் கேட்குறீங்களா?

மேலும் படிக்க: டீ, காஃபி கட்: எலுமிச்சை சாறு குடிப்பதன் பயன்கள்!

உடலுக்கு நல்லதாகவும் இருக்க வேண்டும், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், தினமும் காலை எழுந்தவும் இதனை குடித்து வந்தால் போதுமானது. அப்படி எதை சொல்றீங்க என்ரு கேக்குறீங்களா? புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை. மிகவும் எளிமையான ஒன்று தான். அதுதான் வெந்தயம்.

இதையும் படிங்க: தாய்ப்பாலுக்கு கூழ் அவசியம்!

  1. வெந்தயத்தில் அதிகளவில் கால்சியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.
  2. வெந்தயம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய பிரச்சனைகள் வருவதை கட்டுப்படுத்துகிறது.
  3. இரவு நேரத்தில் ஒரு கை அளவு வெந்தயத்தை எடுத்து அதனை தண்ணீரில் நனைய வைக்க வேண்டும். மறுநாள் காலையில், அந்த தண்ணீரை குடித்துவிட்டு, அந்த வெந்தயத்தையும் மென்று தின்றுவிட வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால், உடல் சூடு குறைவதோடு, எந்த நோயும் வராது என்று கூறப்படுகிறது.
  4. நீரிழிவு நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது நல்லது. செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். அதே போன்று குடலில் புண் இருந்தாலும் குணமாகிவிடும்.
  5. சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் வெளியேற்றப்படும். உடல் எடையை குறைக்க உதவும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

மேலும் தெரிந்து கொள்ள:உடம்பில் சக்தி வேணுமா, இதை சாப்பிடுங்கள்!