வெப்பத்தை தணிக்க பயன்படும் புதினா!

87

வெப்பத்தை தணிக்க பயன்படும் புதினா!

புதினா ஒரு வகையான மருத்துவ மூலிகை. உணவுக்கு மணமூட்டுவதில் சிறந்த பங்காற்றுகிறது. புதினாவை தேநீர், கறி மற்றும் இனிப்புகளுடன் சேர்த்து உண்ணலாம். கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது குளிர்ச்சியாக இருக்கும் குளிர் பானங்களை விட உடலுக்கு அதிகமாக பலன் அளிக்க கூடியதாக இருப்பது புதினா.

பழங்காலத்திலிருந்து மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிள், எலுமிச்சை, வாழைப்பழம், ஸ்ட்ராபெரி முதல் சாக்லேட் புதினா வரை பல வகையான புதினா வகைகள் உள்ளன. இருமல் மற்றும் சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வலி நிவாரணப் பொருட்கள் மற்றும் மிட்டாய் பொருட்கள் ஆகியவற்றிலும் பிற உணவுகளிலும் சுவையூட்டும் பொருளாக புதினா பயன்படுத்தப்படுகிறது.

புதினாவில் உள்ள மெந்தோல் உடலின் செரிமானத்திற்கு பயன்படுகிறது. உடலின் வெப்பத்தை தணிக்கவும் பயன்படுகிறது. சருமத்திற்குச் சிறந்ததாகவும் விளங்குகின்றது. வெயிலின் தாக்கம் காரணமாக அடிக்கடை தலைவலி ஏற்படும். இந்தப் பிரச்சனைக்கு புதினா சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும் புதினா பயன்படுகிறது. அதோடு, சருமத்தை அழகாக்கவும், புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. புதினாவில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் உள்ளன.

புதினா டீ:

தேவையான பொருட்கள்:

புதினா இலைகள் – 6 முதல் 7 வரை

வெந்நீர் – 1 கப்

செய்முறை:

ஒரு கப் சூடான தண்ணீரில் புதினா இலைகளை சேர்க்க வேண்டும். அதனை 10 நிமிடங்கள் வரை ஊற விட வேண்டும். இறுதியாக அதனை வடிகட்டினால் புதினா டீ ரெடி.

புதினா இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ், கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துவதோடு ஆரோக்கியமான மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. உடல் எடை குறைக்கவும் புதினா பெரிதும் பயன்படுகிறது.