வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

168

வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

சத்துக்கள் நிறைந்த ஒன்று வெள்ளரிக்காய். அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. புற்று நோயிலிருந்து கூட நம்மை பாதுகாக்கும். நச்சுக்களை வெளியேற்றி நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் வேலையை வெள்ளரிக்காய் செய்கிறது. தினந்தோறும் வெள்ளரிக்காய் எடுத்துக் கொள்வதால் வாய் துர்நாற்றம் நீங்கும், உடல் எடை குறையும், சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும். இப்படி பல நன்மைகளை அளிக்கும் வெள்ளரிக்காய் கொண்டு கூட்டு செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்…

தேவையான பொருட்கள்:

 1. வெள்ளரிக்காய் பெரியது – 1
 2. வெங்காயம் – 1
 3. பச்சை மிளகாய் – 3
 4. சீரகம் – சிறிதளவு
 5. மிளகு – சிறிதளவு
 6. நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
 7. கடுகு – தேவைக்கேற்ப
 8. கறிவேப்பிலை – தேவையான அளவு…

செய்முறை:

வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகையும், சீரகத்தையும் ஒன்றாக தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வைக்க வேண்டும். பிறகு வெள்ளரிக்காயை போட்டு மிளகு – சீரகத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்க வேண்டும்.

பயன்கள்:

 1. உடலில் உள்ள வெப்பத்தை அகற்றுகிறது.
 2. சிறுநீரை வெளியேற்றி நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு ஆகியவற்றை நீக்குகிறது.
 3. கடல் அடைப்பு பிரச்சனையை சரி செய்கிறது.