வெள்ளிப்பிள்ளையார் கொழுக்கட்டை ரெசிபி செய்வது எப்படி?  

152

வெள்ளிப்பிள்ளையார் கொழுக்கட்டை ரெசிபி செய்வது எப்படி?

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – 6 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – ஒன்றரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 2 கப் நீர்விட்டு ஒரு கொதி விடவும். பின்னர் இறக்கி கல், மணல் போக வடிகட்டி மீண்டும் அடுப்பிலேற்றி தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து உடைத்த ரவையைச் சேர்க்கவும். பாதி வெந்ததும் இறக்கி கைகளில் நெய் தொட்டுக்கொண்டு உருண்டைகளாக உருட்டி இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 8 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஆடி மாதம் வெள்ளிக்கிழமையில் வெள்ளி முளைக்கும் அதிகாலையில் வெள்ளியில் செய்த பிள்ளையாரை வைத்து இந்தக் கொழுக்கட்டையும் செய்து படைப்பது குடும்பத்துக்கு மிகவும் நன்மை தரும்.