வேப்ப எண்ணெயின் நன்மைகள்!

346

வேப்ப எண்ணெயின் நன்மைகள்!

அதிகளவில் கசப்பு தன்மைக் கொண்டது வேப்ப எண்ணெய். விலை குறைவாக இருந்தாலும் நன்மைகள் என்னவோ ஏராளம். வேப்ப எண்ணெய் மருத்துவ குணம் கொண்டது. வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவம் நிறைந்த ஒன்று.

வேப்ப எண்ணெயின் பயன்கள்:

தோல் சுருக்கம்:

வயதாக வயதாக நமது சருமத்தில் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் கரட்டினாய்டு சத்துக்கள் அதிகம் கொண்ட வேப்ப எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தோலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் தடுக்கப்பட்டு இளமை தோற்றம் அதிகரிக்கும்.

கொசுக்கடி:

மலேரியா, டெங்கு, யானைக்கால் வியாதி, சிக்கன்குனியா ஆகியவற்றிற்கு முக்கிய காரணமே கொசு தான். இரவில் தூங்கும் போது வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்து அதன் பிறகு உறங்கினால், கொசுக்கடி மற்றும் பூச்சிக்கடியிலிருந்து தப்பிக்கலாம்.

பொடுகு பிரச்சனை:

வேப்ப எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் தலையில் உள்ள பொடுகு காணாமல் போகும். வேப்ப எண்ணெயை சூடேற்றி வெதுவெதுப்பான சூட்டில் தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும்.

காயங்கள், தழும்புகள்:

உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுத்துகின்றன. இந்த ரத்த காயங்கள் விரைவில் குணமாக காயங்கள், தழும்புகள் உள்ல இடத்தில் தேய்த்து வந்தால் தழும்புகள் மறைந்து போகும்.

மேலும், வேப்ப எண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்தால் வாயிலுள்ள கிருமிகள் அழிந்து போகும். இதனை வெறும் வயிற்றில் பல் துலக்கியதும் செய்து வருதல் வேண்டும். மூச்சு விடுதல் பிரச்சனை இருப்பவர்களுக்கு வேப்ப எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் மூச்சு விடுதல் பிரச்சனை சரியாகும்.

பாத நோய் (சேற்று புண்):

மழைக்காலங்களில் சேற்றில் உள்ள கிருமிகள் காரணமாக, சிலருக்கு தொற்று ஏற்படுவதால், சேற்றுப்புண் ஏற்படுகின்றன. இதற்கு புண் உள்ள இடங்களில் வேப்ப எண்ணெய் தேய்த்தால் விரைவில் சரியாகும்.