ஸ்ரீ ராம நவமி வடை பருப்பு ரெசிபி செய்வது எப்படி?

119

ஸ்ரீ ராம நவமி வடை பருப்பு ரெசிபி செய்வது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரம், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் ஸ்ரீராமனின் பிறந்தநாள். இதனையே ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடுகிறோம். இந்த ராம நவமி நாளன்று பானகம், நீர் மோர், வடைப்பருப்பு நைவேத்தியம் செய்து அனைவருக்கும் தருவார்கள்.

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான பிரசாதம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தப் பதிவில் ஸ்ரீ ராம நவமி வடைப்பருப்பு (வடை பப்பு) பிரசாதம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையானவை:

  1. பாசிப்பருப்பு – 1 கப்
  2. தேங்காய் துருவல் – ¼ கப்
  3. பச்சை மிளகாய் – 2
  4. கொத்தமல்லி – 2 ஸ்பூன்
  5. துருவின மாங்காய் – 2 ஸ்பூன்
  6. உப்பு – தேவைக்கு ஏற்ப மட்டும்.

செய்முறை:

பாசிப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை வடிக்க வேண்டும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவின மாங்காய், உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து, பாசிப்பருப்புடன் கலக்க வேண்டும். தேங்காய் துருவல் சேர்த்து கலந்து மூடி வைக்க வேண்டும். தேவையான வடைப்பருப்பு பிரசாதம் ரெடி.