12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவின் மருத்துவ குணங்கள்!

259

12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவின் மருத்துவ குணங்கள்!

பூக்கள் என்றாலே அது சற்றே அழகானதும், ஆச்சரியமானதும். பல பூக்கள் பார்ப்பதற்கு மிக கவர்ச்சியாக இருக்கும். ஆனால், அவற்றின் தன்மை சிறிது பயங்கரமானதாக இருக்க கூடும். ஒரு சில பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக இருக்கும். ஆனால், அவற்றில் எண்ணற்ற மருத்துவ குணங்களும், சிறப்புக்களும் நிறைந்திருக்கும். அத்தகைய வகையை சார்ந்ததுதான் இந்த குறிஞ்சி பூ. பலருக்கு இந்த பூவிம் சிறப்பு தெரியாமலே இருந்திருக்கும். இந்த பதிவில் குறிஞ்சி மலரின் முழு விவரத்தையும் அறிவோம்.

குறிஞ்சி பூ வின் சிறப்பு:

பூக்களில் மிகவும் முதன்மையானதாக கருதப்படுவது இந்த குறிஞ்சி பூதான். இது 12 வருடத்திற்கு ஒரு முறை பூப்பதால் இதன் பெருமையை நாம் உணராமலே இருந்து விட்டோம். இந்த குறிஞ்சி பூ மிகவும் பிரசித்தி பெற்றது. இது இந்தியாவின் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலே அதிகம் வளர கூடியது. சுமார் 6-20 அடி வரை இதன் வளர்ச்சி இருக்கும். ஜூலை முதல் செட்பம்பெர் மாதத்தில் இது பூக்க தொடரும்.

ஏன் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கிறது?

பொதுவாக மலர்கள் மலர்கிறதென்றால் அதற்கு முதலில் தேவையானது மகரந்த சேர்க்கை. உயிர் தப்பிப் பிழைப்பதற்கான ஒரு வழியாகவே இவை நீண்ட காலம் கழித்துப் பூப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், சில தாவர உண்ணிகள் இவற்றை சாப்பிட்டுவிடுவதால் இவை பல காலம் கழித்து பூக்கின்றன. இது போன்ற கால சூழ்நிலையில் இந்த பூக்கள், தன் மலர்ச்சியை பெறாது. அதனாலையே குறிஞ்சி பூ, மலர 10 முதல் 12 வருட கால அளவு தேவைப்படுகிறது.

குறிஞ்சி தேன்…

இந்த மலரில் எடுக்க படும் தேனானது மிகவும் சுவை கொண்டதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பறவைகள் முதல் அனைத்து விலங்கினங்கள் வரை இவற்றை அதிகம் தேடி வருமாம். அதனாலையே இவற்றிடன் இருந்து தப்பிக்க இந்த தகவமைப்பைக் குறிஞ்சி கொண்டிருக்கின்றன. மேலும், ஒரே தாவரத்தில் சராசரியாக 1,768 பூக்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவம்…

குறிஞ்சி மலரானது சில முக்கிய மருத்துவ பயன்பாட்டிற்கு உதவுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். நம் முன்னோர்கள் குறிஞ்சி பூவை மிக அற்புத மலராகவே கருதினார்கள். குறிப்பாக இன்றும் பல மலை வாழ் மக்கள் இதனை தங்கள் மருத்துவத்திலும், இறை வழி பாட்டிற்கும் பயன்படுத்துகின்றனர்.

குறிஞ்சி தேனின் மகத்துவம்…

குறிஞ்சி பூவில் எடுக்கப்படும் தேனானது மிகவும் அருமையாக இருக்குமாம். அதனாலையே இவை பூக்க தொடங்கிய உடன் தேனீக்கள் இவற்றை சூழ்ந்து கொண்டு விடும். இந்த தேனை மருத்துவ பயன்பாட்டிற்கு உபயோகித்தால் இது அதிக நன்மை தருமாம். அதிலும், தோல் வியாதி, சரும பிரச்சினைக்கு தீர்வாக இது இருக்கும்.

தோல் வியாதிகளுக்கு…

இன்று எதை சாப்பிட்டாலும் ஒரு வித வியாதி நமக்கு வந்துவிடுகிறது. அதிலும் நம் சருமத்தில் வரும் நோய்களின் வளர்ச்சி அதிகமாகி கொண்டே போகிறது. குறிஞ்சி மலரில் உள்ள சில மூல பொருட்கள் உடலில் ஏற்படும் தோல் புண்கள், அலர்ஜி, அரிப்புகள் போன்றவற்றை குணப்படுத்துமாம்.

மூட்டு நோய்களுக்கு…

குறிஞ்சி மலரானது Rheumatism என்று சொல்லப்படும் தசை பிடிப்பு, மூட்டுகளில் ஏற்படும் வலிகள், எலும்பு நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக இருக்குமாம். ஆதிவாசிகள் பண்டைய காலத்தில் இந்த பூவை கசக்கி வலிகள் இருக்கும் இடத்தில தடவுவார்களாம்.

வீக்கத்தை குணப்படுத்த…

திடீரென்று உடலில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்ய இந்த மலர்கள் பெரிதும் உதவுகிறது. இந்த பூக்களை கசக்கி வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்தில தடவினால் வீக்கம் குறையுமாம். இவ்வாறுதான் பாரம்பரிய மருத்துவத்தில் மருத்துவர்கள் பயன்படுத்தினர். சீனர்கள் மற்றும் ஜப்பானியர்கள் இதனை அவர்களின் மருத்துவத்திலும் பயன்படுத்துகின்றனர்.

குறிஞ்சி வேர்…

இந்த மலரின் வேர்கள் கூட மருத்துவ தன்மை கொண்டதாக பண்டைய காலத்து மருத்துவத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதன் வேர்களை காய்ச்சல், சளி, இரும்பல் மற்றும் தொண்டை சார்ந்த சில முக்கிய வியாதிகளை சரி செய்ய பயன்படுத்தினர். இதன் இலைகள் விஷ தன்மை நிறைந்ததாக இருக்குமாம். இருப்பினும் மலை அடிவார மக்கள் இதனை அவர்களின் மருத்துவத்தில் உபயோகித்தனர் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.