அங்காயப் பொடி

238

தேவையான பொருட்கள்.:
கடுகு25 – கிராம்,
வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு,
சுக்கு – ஒரு சிறிய துண்டு, சுண்டைக்காய் வற்றல் – 15, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி அளவு,
மிளகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை.:
கடுகு, வேப்பம்பூ, சுண்டைக்காய் வற்றல், சுக்கு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். பெருங்காயத்தை எண்ணெ யில் பொரிக்கவும். ஆறிய உடன் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும்.

குறிப்பு.:
பிரசவித்த பெண்களுக்கு, இந்தப் பொடியை சூடான சாதத் தில் சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிடக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் காக்கும்.