அரிசிமாவு இனிப்பு கொழுக்கட்டை

107

அரிசிமாவு இனிப்பு கொழுக்கட்டை

 தேவையான பொருட்கள் : அரிசி மாவு- 1குட்டான்தேங்காய்- 1பாசிபருப்பு -25 கிராம்கருப்பட்டி- 1 சின்னதுஉப்பு ஒரு சிட்டிகை 

செய்முறை : 1.அரிசிமாவுடன் பாதி துருவிய தேங்காய் பூ, ஒரு சிட்டிகை உப்பு இவற்றுடன் தண்ணீர் சேர்த்து விரவி1/2மணி நேரம் ஊற வைக்கவும் . 2.உள்ளே வைப்பதற்கு பாசிபருப்பை லைட்டா வருத்துகனும், பிறகு தண்ணீரில்5 நிமிடங்கள் ஊற வைத்தப்பின் கருப்பட்டி, துருவின தேங்காய், இவற்றை விரவிவைக்கவும் . 

மாவு ஊறியபின் இந்த ஸ்டப்பிங்கை உள்ளே வைத்து உருண்டை பிடிக்கவும் பிறகு கொழுக்கட்டை அவிக்கும் பாத்திரத்தில் வைத்து அவிக்க வேண்டும் . இது காலை டிபனுக்கு நல்லா இருக்கும் 

இதனை  ஆசுரா கொழுக்கட்டை என்றும் சொல்லுவார்கள் . உள்அடக்கம் கருப்படி அல்லது வட்டு அல்லது சக்கரை இவற்றை வைத்தும் செய்யலாம் இதுவும் எங்கள் பாரம்பரிய உணவு .சமைக்கும் நேரம் 30 நிமிடம்