அரிசி தேங்காய் பாயசம்

358

தேவையானப் பொருட்கள்.:
150 கிராம் பச்சரிசி,
250-300 கிராம் வெல்லம்,
25-50 கிராம் கசகசா (விருப்ப பட்டால்)
1 பெரிய தேங்காய், துருவியது,
சிறிதளவு ஏலக்காய் போடி,
உலர்ந்த திராட்சை சிறிதளவு.

செய்முறை.:
அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

இதனை மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.

கடைசியாக ஏலக்காய் மற்றும் திராட்சையை தூவி பரிமாறவும்