அறுசுவை பேரிச்சபழம் சட்னி

100

 

அறுசுவை பேரிச்சபழம் சட்டி :தேவையான பொருட்கள்: பேரிச்சை பழம் – 10வெல்லத்தூள் – ஒரு கப்சீராக தூள் – அரை தேக்கரண்டிபுளி – சிறு எலுமிச்சை அளவுகடுகு – கால் தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் – 2வேப்பம்பூ – ஒரு மே கரண்டிநெய் – 2 மே கரண்டி 

செய்முறை: பேரிச்சை பழம் விதை நீக்கி வெந்நீர்ல் ஊறவைத்து மிக்சியில் அரைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து கரைசலை மட்டும் கொதிக்க விடவும் . கொதித்ததும் பேரிச்ச விழுது, வெல்லத்தூள் , சீராக தூள், சேர்த்து மிளகாய்களை கிள்ளிப் போடவும். சிறுது எண்ணெயில் கடுகு போட்டு தாளிக்கவும். இந்த தாளிப்பினை சட்டியில் சேர்க்கவும். கடைசியாக வேப்பபூ வை நெய்யில் வதக்கி சட்னியுடன் கலந்து இறக்கிவிடவும். இந்த அறுசுவை சட்னி யை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.  குறிப்பு  பேரிச்சை பழம் சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சட்னி விரும்பி சாப்பிடுவார்கள் .  வேப்பம் பூ இந்த சம்மர் சீசனில் அதிகம் கிடைக்கும். இதனை காயவைத்து தேவைக்கு நாம் சமையலில் பயன்படுத்தலாம்.. வேப்பபூ வை இந்த சட்னியுன் செய்து சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள கிருமிகளை கொல்லும் . இதில் அறுசுவையும் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியமானது…