பிரெட் பீட்ஸா.:

189

தேவையான பொருட்கள்.:
பீட்ஸா பிரெட் – 1,
சீஸ் – 4 துண்டுகள்,
கேரட், குடமிளகாய், வெங்காயம் – தலா 1,
நெய் – 6 டீஸ்பூன்.

செய்முறை.:
பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டு, வட்டமாக ‘கட்’ செய்யவும்.

சீஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, பிரெட்டின் மீது சுற்றிலும் லேயர் லேயராக வைக்கவும்.

இடைவெளியில் கேரட் துருவலை பரவலாக போட்டு, அப்படியே சாப்பிடவும்.

அடை மாவிலும் அடை தட்டி இதே முறையில் அலங்கரித்து கொடுக்கலாம். அடம் பிடிக்கும் குழந்தையும் ஆர்வமாக சாப்பிடும்.