கரமல் பாதாம்பருப்பு!

531

தேவையான பொருட்கள்:
200 கிராம் பாதாம்
100 கிராம் சீனி
50 மி.லீட்டர் தண்ணீர்
1/2 தே.கரண்டி வனிலா
1/2மே.கரண்டி பட்டர்
1 சிட்டிகை உப்பு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாதாம், சீனி மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில், சீனியை உருக விடவும். சீனி உருகியதும் உப்பு, வனிலா சேர்த்து கலக்கவும்.

சீனி உருகி, அதன் பின்பு பாதாம்பருப்பின் மேல் இறுகி ஒட்டிக் கொள்ளும் பொது தீயைக் கூட்டி, கை விடாமல் கிண்டவும்.

சீனிப்பானி கரமல் பதமாக மாறியதும், தீயை நன்றாக குறைத்து பட்டர் சேர்த்து கிண்டவும்.

பட்டர் உருகி நன்றாக கலந்ததும், பேக்கிங் பேப்பரில் போட்டு, பாதாம்பருப்பு சூடாக இருக்கும் பொழுதே பாதாம்பருப்பை ஒவ்வொன்றாக பிரித்து விடவும்.

குறிப்பு:
உப்பு, வனிலா சேர்க்காமலும் இதைச் செய்யலாம்.
நொர்வே நாட்டில் கரமல் பாதாம்பருப்பை கிறிஸ்மஸ் காலத்தில் செய்வார்கள்.