கேரட் கேக்.

162

தேவையான பொருட்கள்.:
மைதா மாவு – 2 கப்,
சர்க்கரை – ஒன்றரை கப் (அரைக்கவும்), வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன், சன்ஃப்ளவர் ஆயில் – ஒரு கப்,
பெரிய கேரட் – 3 (பொடியாக நறுக்கவும்),
தயிர் – 3 டேபிள்ஸ்பூன்,
டூட்டி ஃப்ரூட்டி – தேவையான அளவு.

செய்முறை.:
அரைத்த சர்க்கரை, மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும்.

கேரட், தயிர், வெனிலா எசென்ஸ் மற்றும் எண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

பிறகு கலந்துவைத்துள்ள மாவுடன் கேரட் கலவை சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு குக்கரின் அடியில் ஒரு கப் உப்பு கொட்டி, குக்கரின் உள்ளே ஸ்டீமிங் ட்ரே ரேக் ஸ்டாண்டு (Steaming Tray Rack Stand) வைத்து குக்கரை மூடி 15 நிமிடங்கள் அடுப்பில் விசில் இல்லாமல் குறைந்த தீயில் வைக்கவும்.

பிறகு திறந்து ஸ்டாண்டின் மேல் கேக் பாத்திரம் வைக்கவும்.

கேக் பாத்திரத்தில் வெண்ணெய் காகிதம் வைத்து அதற்கு மேல் வெண்ணெய் தடவி, மாவு – கேரட் கலவையை ஊற்றவும்.

பிறகு விரும்பினால் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக்கொள்ளவும்.

குக்கரை மூடி, விசில் போடாமல் குறைந்த தீயில் 45 நிமிடங்கள் சமைக்கவும். கேரட் கேக் ரெடி