சித்திரை திருநாளில் மணக்க மணக்க சமைக்க வேண்டிய 6 சுவை உணவுகள் !

345

#மாங்காய் பச்சடி

இனிப்பு, புளிப்பு, கசப்பு என்று மூன்று சுவைகளையும் ஒருங்கே தரும் ஒரு உணவு. மாங்காய் சீசன் இம்மாதத்தில் இருந்து ஆரம்பிப்பதால் இதனை உணவாக செய்வது வழக்கம். கொஞ்சம் புளிப்புடன் கூடிய இனிப்பு சுவை கொண்டது. தமிழ் புத்தாண்டு உணவுகளில் இடம் பெற வேண்டிய மிக முக்கிய உணவு இதுவாகும்.

#பருப்பு பாயாசம்

பாசிப் பருப்பு, வெல்லம், தேங்காய்ப்பால் கொண்டு தயாரிக்கப்படும் பாயாசம் இதுவாகும். இனிப்பு சுவைக்காக இது பரிமாறப்படும்.

#பருப்பு வடை

துவரை பருப்பை ஊற வைத்து, கரகரவென்ற பதத்தில் அரைத்து, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து எண்ணெய்யில் பொரித்து வைக்கப்படும் ஸ்நாக்ஸ் வகை உணவு இது.

#மஞ்சள்_பூசணிக்காய்_சாம்பார்

சாதத்திற்கு சரியான கூட்டாக அமையும் இந்த சாம்பார். மஞ்சள் பூசணிக்காய் சேர்த்து ருசியாக தயாரிக்கப்படும் சாம்பார்.

#கல்யாண_ரசம்

மிளகு, பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலை அரைத்து தாளித்து, அதில் புளிக்கரைசல், தக்காளி, பெருங்காயம் சேர்த்து கொதி விடுவதற்கு முன்பே இறக்கி விட வேண்டும். பின்னர் அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லி தூவி சாம்பாருக்கு அடுத்த இடத்தில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடப்படும் உணவு வகையாகும்.

#நீர்_மோர்

கோடை காலத்தின் துவக்கம் என்பதால், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக அளிக்கப்படுகிறது இந்த உணவு. மோரில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு , மற்றும் சிறிது சீரகப்பொடி சேர்த்து பரிமாறிவது வழக்கம்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !