ஜாமூன் ரைஸ் கீர்

326

தேவையான பொருட்கள்.:
பாஸ்மதி அரிசி – கால் கப்,
பால் – 4 கப்,
சர்க்கரை – ஒரு கப்,
முந்திரிப்பருப்பு – 10,
உலர்திராட்சை – 6,,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
டிரை ஜாமூன் – 6 – 8 (ஸ்வீட் ஸ்டாலில் கிடைக்கும்),
பிஸ்தா – அலங்கரிக்கத் தேவையான அளவு,
நெய் – சிறிதளவு.

செய்முறை.:
பாஸ்மதி அரிசியைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்னர் அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ந்த பின்னர் பாஸ்மதி அரிசி சேர்த்து வேகவைக்கவும்.

இடையிடையே கிளறிக்கொண்டே இருக்கவும்.

அரிசி நன்கு வெந்த பின்னர் கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ளவும்.

பின்னர் சர்க்கரை சேர்க்கவும். 6 – 8 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து கீரில் சேர்க்கவும்.

பரிமாறும் கிண்ணத்தில் அரை கப் கீர் ஊற்றி, ஒரு ஜாமூன் வைத்து, லேசாக இடித்த பிஸ்தா தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.