காராமணி இனிப்பு கொழுக்கட்டை

491

தேவையானவை
வறுத்து, அரைத்த அரிசி மாவு – 1 கப் காராமணி – ½ கப் துருவிய தேங்காய் – ½ கப் வெல்லம் – ½ கப் ஏலத்தூள் – ½ டீஸ்பூன் நெய் – சிறிதளவுசெய்முறை
காராமணியை வறுத்து சிறிதளவு நீர் ஊற்றி வேக வைக்கவும். வெல்லத்தை, 2 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். வடிகட்டி வெல்ல கரைசலில் துருவிய தேங்காய், நெய், காராமணி, ஏலத்தூள், அரிசி மாவு போட்டு பிசையவும். சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து, அதை சின்ன சின்ன வட்டங்களாக தட்டிக் கொள்ளவும். இதை நெய் தடவிய தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். மிக மிக ஆரோக்கியமான கொழுக்கட்டை தயார்.குறிப்பு : 1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் வேக வைத்த காராமணியை லேசாக மசித்துக் கொள்ளுங்கள்.

பலன்கள்
காலை உணவே போஷாக்கு நிறைந்ததாக மாறிவிடும். இரும்புச்சத்து கிடைக்கும். புரதம் சத்துகள் அதிகம்.