காரசாரமான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

398

தேவையானபொருட்கள்…

கத்திரிக்காய், நல்லெண்ணெய், தேங்காய் துருவல், தக்காளி,
வெங்காயம்,
இஞ்சி, பூண்டு, தனியா (மல்லி), காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு), கடுகு, வெந்தயம்,புளி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை உப்பு. தேவைக்கேற்ப

#செய்முறை…

கத்தரிக்காய்.. கழுவிட்டு அடி பாகத்தை 4 கீறல் போட்டு வச்சுட்டு.

கடாயில..
தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் எல்லாத்தையும் லைட்டா வறுத்து வச்சுட்டு.

அதே கடாயில.. நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு & தேங்காய் துருவல் போட்டு வதக்கி எடுத்துட்டு.

அடுத்து ரெண்டையும் தண்ணி விட்டு நல்லா விழுதா அரைச்சு எடுத்து வச்சுட்டு. கொஞ்சம் எண்ணெய் விட்டு கீறல் போட்ட கத்திரிக்காய முக்கால் பதத்துக்கு வதக்கனும்.

இப்போ வேற கடாயில எண்ணெய் நல்லா தாராளமா ஊத்திக்கணும் ஏன்னா இது எண்ணெய் கத்திரிக்கா கடுகு, வெந்தயம், கொஞ்சம் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, அதுல already அரைச்ச விழுதையும் போட்டு பச்சை வாசனை போக வதக்கி, அடுத்து கத்தரிக்காய் சேர்த்து… புளி கரைசல் விட்டு கொழம்புக்கு தேவையான தண்ணி, உப்பு சேர்த்து, காரமும் பாத்து போட்டுட்டு ஒரு 10min கொதிக்கவிட்டா கிரேவியா எண்ணெய் பிரிஞ்சி வரும்.

அந்த டைம்ல இறக்கிட்டு, கருவேப்பிலை & கொத்தமல்லி தழைய தூவி நல்லா சுடு சாதம் – சுட்டஅப்பளம் அல்லது புடலங்காய்கூட்டு அல்லது உருளைகிழங்கு புட்டு அல்லது சிப்ஸ் அல்லது முளைக்கீரை பூண்டு மசியல் அல்லது பொட்டுகடலை துவையல் இவற்றுடன் பரிமாறலாம்.