ஆரோக்கியமான கருப்பட்டி கேரட் பால்

290

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி

தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்து நிறைந்த கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

துருவிய கேரட் – 1 கப்,
கருப்பட்டி – 3 டீஸ்பூன்,
இஞ்சிச்சாறு – 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – சிறிது,
பால் – 250 மி.லி.

செய்முறை :

* பாலை நன்றாக கொதிக்க வைத்து ஆற விடவும்.

* மிக்சியில் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த கேரட் ஜூஸை வடிகட்டி கொள்ளவும்.

* வடிகட்டிய ஜூசில் கருப்பட்டி, இஞ்சிச்சாறு, ஏலக்காய்த்தூள், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

* சத்தான சுவையான கருப்பட்டி கேரட் பால் ரெடி.

குறிப்பு:

பீட்ரூட்டிலும் செய்யலாம். கூடுமானவரை அஸ்காவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.