கவுனி அரிசி சத்து கஞ்சி

133

தேவையானவை
கவுனி அரிசி – ½ கப் காய்ச்சிய பால் – 1 கப் நாட்டு சர்க்கரை – தேவையான அளவு தேங்காய்ப் பால் – அரை கப் நட்ஸ் பவுடர் – ஒரு டீஸ்பூன் முந்திரி, திராட்சை, பாதாம் – தேவையான அளவு ஏலப்பொடி – 1 சிட்டிகை நெய் – சிறிதளவு

செய்முறை
கவுனி அரிசியை இரவு முழுவதும் ஊறவிடவும். காலையில், குக்கரில் 3 கப் நீர் ஊற்றி, கவுனி அரிசி போட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும். நன்கு வெந்த கவுனி அரிசியை, ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கொர கொரவென (ஓன்னும் பாதியுமாக) அரைக்கவும். அரைத்ததை அடுப்பில் ஏற்றி ஒரு கப் பால், அரை கப் தேங்காய் பால் ஊற்றி நாட்டு சர்க்கரை சேர்க்கவும். நட்ஸ் பவுடரும் சேர்த்துக் கலக்கவும். 5 நிமிடங்கள் வேக விடவும். அவ்வப்போது கிளறவும். சிறிது நெய்யில் நட்ஸ் வறுத்து, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.

பலன்கள்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் கிடைக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசிதாங்கும். கவுனி அரிசியில் உள்ள சத்துகள், புற்றுநோயைத் தடுக்கும்.