காயமருந்து

219

தேவையானவை : 

காயதூள் – ¼ குட்டான்

தேங்காய் – 4

முட்டை – 8

நெய் – 50 கிராம்

பூண்டு – 100 கிராம்

கருப்புட்டி – ¾ கிலோ

நல்லெண்ணெய் – 75 கிராம்

சீனி – 300 கிராம்

கசகசா – 50 கிராம்

பாதாம் – 50 கிராம்

பிஸ்தா – 50 கிராம்

செய்முறை விளக்கம் :  பாதாம், பிஸ்தாவை திரித்து வைத்துக்கொள்ளவும். கசகசாவை மிக்ஸ்யில் அடித்து வைத்துக்கொள்ளவும்.கருப்புட்டியை நன்கு காய்ச்சி வைத்துக்கொள்ளவும்.முதலில் வெள்ளைப்பூண்டு தோல் எடுத்து நன்கு வேக வைக்கவும்.பின்பு அதை நன்கு மசிக்கவும். திருவிய தேங்காயை மிக்ஸ்யில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, தலைப்பால் எடுத்துவைக்கவும். பின்பு தேங்காயை இன்னும் மிக்ஸ்யில் போட்டு இரண்டாம் பால், மூன்றாம் பால் எடுத்து, அந்த பாலில் காயம் தூளைப்போட்டு, கலக்கி அடுப்பில் வைக்கவும்.முக்கியமாக கைவிடாமல் காய்ச்சவும். காயதூள் நன்கு வெந்த பிறகு காய்ந்த கருப்புட்டியை அடைய வைத்து தெளிவாக ஊற்றவும். பின்பு 10 நிமிடம் கழித்து, சீனி, வெள்ளைப்பூண்டை அத்துடன் ஊற்றவும். சீனி தண்ணீர் வற்றியதுடன் நல்லெண்ணெய் நெய் ஊற்றவும். அதன் பிறகு கசகசா பாலை ஊற்றவும். இவைகள் நன்கு வற்றியபிறகு தலைப்பாலில் முட்டை ஊற்றி நன்கு அடித்து அந்த கலவையுடன் ஊற்றி முட்டை வேகும்வரை கைவிடாமல் கிளரவும். பின்பு இவைகளுடன் பாதாம், பிஸ்தாவை போட்டு கிளறி விடவும். இவைகள் நன்கு வற்றி நெய் விட்டு சேர்ந்து வந்ததும், இறக்கி விடவும்.  சமைக்கும் நேரம்: 2 மணி நேரம் .பரிமாரும் அளவு: ½ கிலோ. கூடுதல் டிப்ஸ்:• தேங்காப்பால் எடுக்க அதிக தண்ணீர் ஊற்றி செய்யாமல். மிக குறைந்த அளவே தண்ணீர் ஊற்றி தலைப்பால் ,இரண்டாம் பால் எடுக்கவும்.• கருப்புட்டி காய்க்கவும், தண்ணீர் குறைவாக ஊற்றவும் செய்து முடித்த பிறகு, மூடிக்கொண்டு மூடாமல் துணியை கொண்டு மூடவும்.• ஆரம்பம் முதல் இறுதி வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.• இதை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது. குறிப்பு: வயதிற்கு வந்த பிள்ளைகளுக்கும், குழந்தைப்பெற்ற தாய்மார்களுக்கும் இதை செய்து கொடுக்கும் பழக்கம் காயல் மக்களிடம் உள்ளது. குழந்தைப்பெற்ற தாய்மார்கள் இதை சாப்பிடுவதால் கருப்பை சுருங்கி சகஜநிலைக்கு வரும்.