கீரை மசியல்

394

தேவையான பொருட்கள்.: முளைக்கீரை – அரை கட்டு (ஆய்ந்து, அலசி நறுக்கவும்),
பாசிப்பருப்பு – கால் கப் (அரை மணி நேரம் ஊற வைக்கவும்),
தக்காளி – ஒன்று ( நறுக்கவும்),
தோலுரித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப்,
பூண்டு – 2 பல் (தட்டவும்),
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கடுகு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
சீரகம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை.:
குக்கரில் கீரை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள்தூள், பாசிப்பருப்பு, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கி மத்தால் மசிக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம் தாளித்து, கீரையுடன் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு.:
இதை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்; பிரெட் அல்லது சப்பாத்தியின் மீது தடவியும் சாப்பிடலாம். அரைக்கீரை, சிறு கீரையிலும் இதைச் செய்யலாம்.