கொள்ளு குழம்பு

436

தேவையான பொருட்கள்:

1. கொள்ளு – 200 கிராம்,

2. பெரிய வெங்காயம் – 200 கிராம்,

3. தக்காளி – 200 கிராம்,

4. பச்சைமிளகாய் – 5,

5. இஞ்சி – 25 கிராம்,

6. பூண்டு – 25 கிராம்,

7. கடுகு – 15 கிராம்,

8. மிளகு – 15 கிராம்,

9. சீரகம் – 15 கிராம்,

10. சின்ன வெங்காயம் – 100 கிராம்,

11. காய்ந்தமிளகாய் – 5,

12. மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்,

13. மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,

14. தனியா தூள் – 1 டீஸ்பூன்,

15. வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,

16. புளி – 50 கிராம்,

17. நல்லெண்ணெய் – 200 மி.லி.,

18. கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது,

19. உப்பு – தேவையான அளவு.

🍴செய்முறை:

1. கொள்ளை நன்கு சுத்தம் செய்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து, குக்கரில் வேக வைக்கவும்.

2. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்தமிளகாய் தாளித்து, சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

3. பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு, வெந்த கொள்ளு, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.

சுவையான கொள்ளு குழம்பு ரெடி.

குறிப்பு:

உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் உணவில் கொள்ளை சேர்த்து கொள்ளலாம்…