கொள்ளு பாயசம்

483

தேவையான பொருட்கள்.:
பூங்கார் அரிசி – 1 கப்,
தேங்காய்த்துருவல் – 1 கப்,
கொள்ளுப் பருப்பு – 1/4 கப்,
வெல்லப்பொடி – 1/2 கப்,
உப்பு – 1 சிட்டிகை,
சுக்கு தூள், சோம்பு தூள் – தலா 1 டீஸ்பூன்.

செய்முறை.:
பூங்கார் அரிசியை சுத்தம் செய்து கழுவி ஊறவைக்கவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் கொள்ளுப் பருப்பை சேர்த்து வேகவிடவும்.

பாதி வெந்ததும் ஊறிய அரிசியை சேர்த்து வேகவிடவும்.

அரிசி நன்றாக வெந்ததும் வெல்லப்பொடி, தேங்காய்த்துருவல், உப்பு, சுக்கு தூள், சோம்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்