கொள்ளு ரசம்

421

தேவையானபொருட்கள்…

வேகவைத்த கொள்ளு – 2 டேபிள்ஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – ஒன்று
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
பூண்டு – 3 பல்
கொத்தமல்லித்தழை – சிறிது
வேகவைத்த கொள்ளுத் தண்ணீர் – ஒரு கப்

தாளிக்க…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
வெந்தயம் – சிறிது
காய்ந்த மிளகாய் – 2
பொடித்த பெருங்காயம் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை…

மிளகு, சீரகம் மற்றும் பூண்டை இடித்துக் கொள்ளவும். வேகவைத்த கொள்ளை நன்றாக மசித்துக்கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் மசித்து வைத்துள்ள கொள்ளு, இடித்து வைத்துள்ள மிளகு-சீரகம்-பூண்டு, வேகவைத்த கொள்ளுத் தண்ணீர், புளித் தண்ணீர் அனைத்தையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். நுரை கூட்டி வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு…

ரசத்தை அதிக நேரம் கொதிக்கவிட்டால், கடுத்துவிடும். அதாவது, உப்பு கூடியதுபோல் ஆகிவிடும். நுரைத்து வரும்போதே இறக்கிவிட வேண்டும்.