கொண்டைக்கடலை கேரட் சாலட்

414

இந்த சாலட்டை சாப்பிட்டால் வயிறு நிரம்பும். மாவுச்சத்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைக்க உதவும். இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை – 1 கப்

கேரட் – 3
கொத்தமல்லி – சிறிதளவு
வெங்காயம் – 1
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
ப.மிளகாய் – 1
மிளகு தூள் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
இந்துப்பு – சிறிதளவு

கொண்டைக்கடலை கேரட் சாலட்

செய்முறை

கொண்டைக்கடலையை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்

ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு அதனுடன் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் போட்டு நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சத்தான கொண்டைக்கடலை கேரட் சாலட் ரெடி.