சுவையான மாம்பழ கொத்சு!……

165

தேவையான பொருட்கள்

மாம்பழம் ஒன்று, வெந்தயம் கால் டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, மல்லி (தனியா) தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
காய்ந்த மிளகாய் – 6,
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிதளவு,
புளி நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் சிறிதளவு,
உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

மாம்பழத்தை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விடாமல் கடலைப்பருப்பு, மல்லி, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு… கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் தாளித்து, மாம்பழத்தைச் சேர்த்து குழைய வேகவிடவும். வெந்த மாம்பழக் கலவையில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்த பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.