மாதுளை தயிர் பனாமி

243

தேவை:  மாதுளைமுத்துகள்–அரைகப் ஃப்ரெஷ் மாதுளைச்சாறு (நீர்சேர்க்காதுசாறுஎடுக்கவும்) – 50 மில்லி புளிக்காத கெட்டித்தயிர்–அரைகப் வெள்ளைமிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள்–தலா கால் டீஸ்பூன் பொடியாக நறுக்கிய புதினா–ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு– 2 சிட்டிகை.

செய்முறை: ஒரு பவுலில் உரித்த மாதுளை முத்துகள்,
உப்பு, வெள்ளைமிளகுத்தூள், சீரகத்தூள், சாட்மசாலாத்தூள், மாதுளைச்சாறு சேர்த்து நன்கு கிளறி, அதனுடன் கெட்டித்தயிர் மற்றும் புதினா கலந்து எடுத்தால் அருமையான சுவையுடன் மாதுளை தயிர் பனாமி ரெடி. இதைக்காலை உணவாக ஒரு கப் முழுமையாக எடுக்கலாம். அனைத்துக்கலவை சாதத்துக்கும் ஏற்ற சைடிஷ் இது.

பயன்: மாதுளை சிறந்த நோய் எதிர்ப்புசக்தி தரும் வரப்பிரசாதப்பழமாகும். புரோட்டீன், கார்போஹைட்ரேட், தாதுகள், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி போன்ற பல சத்துகளை உள்ளடக்கியது. தயிரில் உள்ள புரோட்டீன் செரிமானத்தைச்சுலபமாக்கும். உடலின் சூட்டைத்தணிக்கும். தயிர், கால்சியம்மிக்கது .